ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 4 ஆண்டுகள் வரை நீட்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

TNN 7 Jul 2016, 2:17 pm
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 4 ஆண்டுகள் வரை நீட்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil cm jayalalitha announced to extend the medical insurance scheme for govt employees
அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு


2012ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு யுனைட்டட் இந்தியா நிறுவனம் மூலம் அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம் ஜூனில் முடிந்ததால் சில கூடுதல் பயன்களுடன் காப்பீடு திட்டத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி ரூ.7.5 லட்சமாக வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் மாத தவணை ரூ180 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.4 லட்சமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி