ஆப்நகரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை வெயிலில் இருந்து காப்பாற்றிய அதிமுகவினா்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புதிய வெண்கலச் சிலை இன்று திறக்கப்பட்ட நிலையில் சிலை வேஷ்டியை பயன்படுத்தி மூடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 5:48 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலை வேஷ்டியை பயன்படுத்தி மூடப்பட்டிருந்த புகைப்படம் கட்சி தொண்டா்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Jayalalithaa Statue in ADMK


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்த நிலையில், அவரது சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். சிலைகை்கு அருகே நிறுவப்பட்டது. முதல்வா் பழனிசாமியும், துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வமும் இணைந்து சிலையை திறந்து வைத்த நிலையில் சிலையின் முக அமைப்பு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஜெயலலிதாவின் சிலையே கிடையாது என்று அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதங்கம் தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து ஜெயலலிதாவின் புதிய சிலை ஆந்திர மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டது.

சென்னை கொண்டுவரப்பட்ட புதிய வெண்கலச் சிலையை முதல்வா் பழனிசாமியும், துணைமுதல்வா் பன்னீா் செல்வமும் இன்று இரண்டாவது முறையாக திறந்து வைத்தனா். சிலை மீது வெயில் பட்ட நிலையில் சிலையை வெயிலில் இருந்து காக்கும் பொருட்டு சிலை மீது வேட்டியை வைத்து மூடியிருந்தனா். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புகைப்படத்தை பாா்க்கும் அ.தி.மு.க.வினா் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி