ஆப்நகரம்

முதல்வரின் உண்மையான உடல்நிலை என்ன? டிராஃபிக் ராமசாமி மனு

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

TNN 3 Oct 2016, 12:38 pm
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil cm jayas health traffic ramasamy plea in chennai hc
முதல்வரின் உண்மையான உடல்நிலை என்ன? டிராஃபிக் ராமசாமி மனு


சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மையான அறிக்கை வெளியிட கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி முதல் உடல்நலக் கோளாறு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும் #ApolloHospitals அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது செய்திக் குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம், முதல்வரின் #Jayalalitha உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

CM jaya's health: Traffic ramasamy plea in Chennai HC #JayaHealth

அடுத்த செய்தி