ஆப்நகரம்

விபத்துக்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி

பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

Samayam Tamil 24 Oct 2018, 5:15 pm
அண்மையில் நடந்த பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளயிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
Samayam Tamil edapadi palanisamy


‘கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கிள்ளியூர் கிராமம், ஆழங்காணிவிளையைச் சேர்ந்த மருதநாயகம் என்பவரின் மகன் பால்ரெத்தினம் என்பவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, லாரி மோதியதால், மின்கம்பம் உடைந்து அவர் மீது விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் சிறுமி நித்திஷா என்பவர் வயலில் விளையாடச் சென்ற போது, தேங்கிய மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், தகடி கிராமத்தைச் சேர்ந்த முனியன் (லேட்) என்பவரின் மனைவி சௌபாக்கியம் என்பவர் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், வடகரை கீழ்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் அப்துல்கப்பார் என்பவர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிஉயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்க ஆசாரி என்பவரின் மகன் தட்சணாமூர்த்தி என்பவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றின் காரணமாக தவறி குளத்தில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தளம் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்பவரின் மனைவி சுந்தரம் என்பவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் முத்தையா என்பவர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் செல்வராஜ் என்பவர் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அடுத்த செய்தி