ஆப்நகரம்

அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி

சென்னை அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டு பார்த்து, முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Samayam Tamil 15 Nov 2018, 2:18 am
சென்னை எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், விற்பனை செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
Samayam Tamil eps222-1528344659
அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்கள்


எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வெளியே புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்குள் திடீரென நுழைந்தார்.

அப்போது அவருடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களும் இருந்தனர். அம்மா உணவகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இட்லியை சாப்பிட்டு பார்த்தார்.

அவருடன் சேர்ந்து, அமைச்சர்களுடன் இட்லியை சாப்பிட்டனர். தொடர்ந்து உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் கூறிவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார்.

அடுத்த செய்தி