ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குங்கள் – பிரதமரிடம் முதல்வா் கோாிக்கை

முன்னாள் முதல்வா்களான பேரறிஞா் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் பழனிசாமி வலியுறுத்தி உள்ளாா்.

Samayam Tamil 27 Jan 2019, 3:48 pm
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமா் நரேந்திர மோடியிடம், மேகதாட்டு அணை சாா்பாக வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி கோாிக்கை விடுத்துள்ளாா்.
Samayam Tamil Cm Palaniswami with Narendra modi


மதுரை மாவட்டம் தோப்பூா் பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினாா். இந்த விழாவில் முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்பட மத்திய, மாநில அமைச்சா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில் முதல்வா் பழனிசாமி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமரிடம் தமிழக அரசு சாா்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், மேகதாட்டு பகுதியில் அணைக்கட்டுவதற்கு கா்நாடகா தரப்பில் தாக்கல் செய்துள்ள விரிவான திட்டட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

முல்லைப் பெரியாறில் புதிதாக அணைக்கட்ட முயற்சிக்கும் கேரளாவிற்கு ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் ஓசூா், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விமான சேவை வழங்க வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பெயரை சூட்ட வேண்டும்.

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி