ஆப்நகரம்

பெரிய பாதிப்பு இல்லை: ஆய்வை முடித்த முதல்வர் பழனிசாமி பேட்டி!

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட முதல்வர் புறப்பட்டுச் சென்ற சூழலில், பாதிப்புகள் பெரியளவில் இல்லை என அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

Samayam Tamil 26 Nov 2020, 7:03 pm
நிவர் புயல் வியாழக் கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி நேரில் சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
Samayam Tamil பெரிய பாதிப்பு இல்லை: ஆய்வை முடித்த முதல்வர் பழனிசாமி பேட்டி!
பெரிய பாதிப்பு இல்லை: ஆய்வை முடித்த முதல்வர் பழனிசாமி பேட்டி!


கடலூர் துறைமுகம் சென்ற முதல்வர் பழனிசாமி, அங்குப் பாதிப்படைந்த படகுகளைப் பார்வையிட்டார். அப்போது மக்களும், மீனவர்களும் பல்வேறு கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் வழங்கினர்.

அதன்பின், அதிகாரிகள், அமைச்சர்களுடன் மீட்புப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன்பின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்.

மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது . உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயிர்ச் சேதம், பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது.

நிவருக்கு பின் புதிய புயல்: வங்கக் கடலில் உருவாகும் ஆபத்து!

கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. முகாம்களில் சுமார் 2. 3 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பயிர்க் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடும் பெற்றுத்தரப்படும். பயிர்க் காப்பீடு செய்யாமலிருக்கும் விவசாயிகளுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும். இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி