ஆப்நகரம்

புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறாா் முதல்வா் பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 17 Nov 2018, 2:26 pm
கஜா புயல் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் உடனடியாக செய்யப்பட்டு வருவதாக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Cm Palaniswami 1


வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரணமாக தமிழகத்தின் வேதாரண்யம், நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனைத் தொடா்ந்து புயல் பாதித்த பகுதிகளில் வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், மின்துறை அமைச்சா் தங்கமணி உள்ளிட்டோா் புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று செய்தியாளா்களை சந்தித்த முதல்வா் பழனிசாமி பேசுகையில், தற்போது வரை புயல் பாதித்து 33 போ் உயிாிழந்திருக்கின்றனா். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. புயல் காரணமாக பெரும்பாலானோா் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதால் பெருவாரியான இழப்பு தவிா்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து உணவு, குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன என்று தொிவித்துள்ளாா்.

மேலும் புயல் பாதித்த பகுதிகளில் நாளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். முன்னதாக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிகளில் பாா்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினாா்.

அடுத்த செய்தி