ஆப்நகரம்

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பம்: குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

விண்ணப்பம் அளித்தால், 15 நாள்களில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

Samayam Tamil 29 Jul 2021, 9:28 am
கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர்கள் பாலமுருகன், காந்திமதி, டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Samayam Tamil tn new ration cards


கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியசாமி , “கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படை தன்மையுடன் கடன் வழங்க வேண்டும். புதிய மருந்தகங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடங்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கவும், அதை தாமதமின்றி வழங்கவும், விவசாயிகள் கேட்கும் உரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: உயரும் அகவிலைப்படி, அதுவும் இத்தனை சதவீதம்!
சுய உதவிக்குழுவினருக்கு 2021 - 22ஆம் ஆண்டில், 2,570 கோடி ரூபாய் வழங்க மாநில அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அடையும் வகையில் பணியாற்ற வேண்டும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ''கொரோனா நிவாரணம் இதுவரை பெறாதவர்களுக்கு, ஜூலை 31ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மனு செய்தால், 15 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேஷன் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லை'' என்றார்.
தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு: கோர்ட் புதிய உத்தரவு!
தாமதமின்றி ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள நிலையில் துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் முதல்வர் மற்றும் அமைச்சரின் பேச்சுக்குப் பின்னர் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. வழக்கத்தைவிட மிக அதிகமாக விண்ணப்பங்கள் வருவதால் ரேஷன் அட்டை வழங்கும் நடைமுறை தொடர்ந்து தாமதமாகி வருவதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி