ஆப்நகரம்

தமிழகத்தின் காலைப் பொழுதை மகிழ்ச்சியாக்கிய மழைப் பொழிவு!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது

Samayam Tamil 10 Jan 2018, 11:44 am
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
Samayam Tamil coastal side districts in tamilnadu gets rain in the early morning
தமிழகத்தின் காலைப் பொழுதை மகிழ்ச்சியாக்கிய மழைப் பொழிவு!


வங்கக் கடலின் தெற்குப் அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி உள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை, புதுச்சேரி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் உள்ளதால், மேலும் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரங்களில் வடகிழக்கில் இருந்து மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி