ஆப்நகரம்

கோடையில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2018, 8:33 pm
கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
Samayam Tamil 625.500.560.350.160.300.053.800.900.160.90


கோவையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை வருவது போல இருந்தது. இதனையடுத்து, பல இடங்களில் மழை கொட்டியது.

குறிப்பாக கவுண்டன்பாளையம், தடாகம் சாலை பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. வேகமான காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை சில இடங்களில் பெய்தது.

மாநகரப் பகுதியில் பரவலாக லேசான தூறல் பொழிந்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி