ஆப்நகரம்

கோவையில் குறும்படத்துக்கு சிறப்பு பூஜை!

கோவையில் பல்வேறு துறைகளை சேர்ந்த இளம் மாணவர்கள் சேர்ந்து உருவாக்க உள்ள குறும்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சரவணம்பட்டியில் நடைபெற்றது

Samayam Tamil 10 Feb 2019, 3:00 am
கோவையில் பல்வேறு துறைகளை சேர்ந்த இளம் மாணவர்கள் சேர்ந்து உருவாக்க உள்ள குறும்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சரவணம்பட்டியில் நடைபெற்றது
Samayam Tamil vlcsnap-2019-02-10-17h02m37s313


கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயிலும்மாணவர்கள் சேர்ந்து தயாரித்து இயக்கி நடிக்கும் குறும்படத்திற்கான துவக்க பூஜை நிகழ்ச்சி சரவணம்பட்டியில் விஸ்வாசபுரம் கோவிலில் நடைபெற்றது. 360 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை இளம்இயக்குனர் ரிபாஷ் இயக்க உள்ளார்.மேலும் ரோபோ சங்கர் மற்றும் நக்சத்ரா நாகேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.இந்த குறும்பட குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாயகன் நவீன் குமார் உடல் ஆரோக்கியம் ஒரு எவ்வாறு மனிதனை சாதிக்க தூண்டுகறது என்பதை புதிய கோணத்தில் இந்த குறும்படத்தில் கூற உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் விக்கி,தற்போதை காலத்தில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்றாலே பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்த குறும்படம் இருக்கும் என தெரிவித்தார்...குறும்படம் என்றாலே சிறிய பட்ஜெட் என்பதை தாண்டிபெரிய பட்ஜெட்டில் இந்த குறும்படத்தை பாலைவனம் போன்ற பகுதிகளிலும் படமாக்க இருப்பதாக இந்த இளம் மாணவர் பட்டாளம் தெரிவித்துள்ளனர்....

அடுத்த செய்தி