ஆப்நகரம்

ஜப்பான் நாட்டின் கல்வி சுற்றுலாவுக்கு கோவை மலைக்கிராம மாணவி தேர்வு!

கோவை மாவட்டம் வெள்ளியங்காடு அரசுபள்ளியில் படிக்கும் காளியப்பனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சவிதா, ஜப்பான் நாட்டின் கல்வி சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ளார்.

Samayam Tamil 15 Feb 2018, 5:16 pm
கோவை மாவட்டம் வெள்ளியங்காடு அரசுபள்ளியில் படிக்கும் காளியப்பனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சவிதா, ஜப்பான் நாட்டின் கல்வி சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ளார்.
Samayam Tamil coimbatore tribal student savitha selected for japan education tour
ஜப்பான் நாட்டின் கல்வி சுற்றுலாவுக்கு கோவை மலைக்கிராம மாணவி தேர்வு!



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வெள்ளியங்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பழங்குடியின மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு 11ம் வகுப்பு பயிலும் காளியப்பனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சவிதா என்ற மாணவியும், இயற்பியல் ஆசிரியை ஆர். மகேஸ்வரியும், மத்திய அரசின் மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து அறிவியில் பாடத்தில் சிறந்து விளங்கும் 96 மாணவ மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை என்ற பெருமையை மகேஸ்வரி பெற்றுள்ளார்.

இது குறித்து மாணவி சவிதா கூறுகையில், தினமும் 20 கிலோமீட்டர் பயணம் செய்து வெள்ளியங்காடு பள்ளிக்கு சென்று வருவதாகவும், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்றதாகவும் கூறினார்.

மேலும், தான் ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ளது, தனது மலைக்கிராமம் மட்டுமில்லாது சுற்றுவட்டார அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி