ஆப்நகரம்

அடுத்த 2 நாட்களுக்கு கடும் குளிர். வெளிய வராதீங்க; எச்சரிக்கும் வெதர்மன்

தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும் என்று வெதர்மன் கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2018, 4:18 am
தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும் என்று வெதர்மன் கூறியுள்ளார்.
Samayam Tamil coldest nights of the season may be recorded in the next two days in many parts of north interior tamil nadu weatherman
அடுத்த 2 நாட்களுக்கு கடும் குளிர். வெளிய வராதீங்க; எச்சரிக்கும் வெதர்மன்


கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமான குளிர் இருந்து வருகிறது. மாலை முதலே குளிரின் தாக்கம் உணரப்பட்டு, இரவு நேரங்களில் அதிகப்படியாக உள்ளது. பொதுமக்கள் குல்லாக்களை அணிந்து கொண்டும், சூடான பானங்கள் அருந்தியும் குளிரிலிருந்து காத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் வெதர்மன், தனது பேஸ்புக் பக்கத்தில், குளிர் சூழல் பற்றி கணிப்பு வெயிட்டுள்ளார். அதில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் இருக்கும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான குளிர் இருக்கும் என்றும் சென்னையில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி