ஆப்நகரம்

ஆசிரியர் உயிருக்கு பாதுகாப்பற்ற கல்லூரி

திருச்சியில் உள்ளது உருமு தனலட்சுமி கல்லூரி. இங்கு பணியாற்றும் 12 ஆசிரியர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளனர். இவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இவ்வாறு காப்பீடு எடுத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 23 Jan 2019, 11:24 am
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியர்கள் 1 கோடி ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ள சம்பவம் வியப்புக்குள்ளாகி உள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டுய அவசியம் என்ன எனப் பார்ப்போம் .
Samayam Tamil teachers

திருச்சியில் உள்ளது உருமு தனலட்சுமி கல்லூரி. இங்கு பணியாற்றும் 12 ஆசிரியர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளனர். இவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இவ்வாறு காப்பீடு எடுத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெயர் கூற விரும்பாத ஆசிரியர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், முன்னதாக ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் குழுவால் தாக்குதலுக்கு உள்ளானர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இதுபோல குற்றச்சாட்டுகள் முன்வைத்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஆசிரியர் எச்சரிக்கப்பட்டார்.

எனவே இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆகவே ஆசிரியர்கள் ஒருவேளை தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் தங்களது குடும்பங்களைப் பாதுகாக்க அதிக தொகைக்கு காப்பீடு எடுத்துள்ளனர் என்றார் அவர்.

இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி