ஆப்நகரம்

ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி

ஓடும் ரயிலின் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

TNN 2 Jan 2017, 8:42 pm
கோவை: ஓடும் ரயிலின் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil college student dies while taking selfie infront of train
ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி


ஸ்மார்ட் போன் வந்த காலம் முதலே செல்ஃபி மோகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது. நின்றால் செல்ஃபி, உட்கார்ந்தா செல்ஃபி, சாப்பிடும் போது, தூங்கும் போது, பல் தேய்க்கும் போது என பல்வேறு ஸ்டைல்களில் செல்ஃபியாக எடுத்துத் தள்ளி கொண்டுள்ளது ஒரு கும்பல். அதேசமயம், சில ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தியும் வருகிறது.

இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து, விடுதியில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

தொடர்ந்து, அங்கிருந்த ரயில் பாதையின் முன்பு சென்றவர், அங்கு வந்து கொண்டிருந்த திருவனந்தபுரம்-புதுதில்லி விரைவு ரயில் முன்பு நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, ரயிலின் ஈர்ப்பு விசை காரணமாக உள்ளே இழுக்கப்பட்ட மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
College Student dies while taking selfie infront of train

அடுத்த செய்தி