ஆப்நகரம்

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: கல்லூரி மாணவர் கைது

தடை செய்யப்பட்ட ஒற்றை இலக்க மற்றும் இதர லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 19 Dec 2016, 10:00 pm
சென்னை: தடை செய்யப்பட்ட ஒற்றை இலக்க மற்றும் இதர லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil college student held for selling single digit lottery in chennai
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: கல்லூரி மாணவர் கைது


சென்னையில் எழும்பூரில் உள்ள தனியார் டிராவல்ஸில் ஒற்றை இலக்க மற்றும் இதர லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்து லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனர். ஆனால், அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேசமயம், அங்கு பணிபுரிந்து வந்த வேலூரை சேர்ந்த நசீம் அகமது (20), எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்துக் கொண்டே, எழும்பூரில் உள்ள குறிப்பிட்ட அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்கு, தமிழக அரசு, கடந்த 2003-ஆம் ஆண்டில் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
College student held for selling single digit lottery in Chennai

அடுத்த செய்தி