ஆப்நகரம்

சிங்காநல்லூர் ஏரியில் வணிக ரீதியாக மீன் பிடிக்க தடை- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

Samayam Tamil 30 Dec 2018, 10:10 pm
வரும் ஜனவரி 1 முதல் சிங்காநல்லூர் ஏரியில் வணிக தேவைக்காக மீன் பிடிப்பதற்கு தடை பிறக்கப்படுவதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சிங்காநல்லூர் ஏரியில் மீன் பிடிக்க தடை


கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், சிங்கநல்லூர் ஏரி நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்புப் பகுதி அறிவிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவுப்பெற்றது நினைவுக்கூறப்பட்டது. இதில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, நன்னீர் மீன் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அதை தொடர்ந்து பேசிய அவர், கோயம்புத்தூரில் உள்ள 19 ஏரிகளில் வணிக ரீதியாக மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சிங்காநல்லூர் ஏரியில் அதிகளவிலாக மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஏரியின் பல்லுயிர் பாதுகாப்பு அம்சம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிங்கநல்லூர் ஏரியில் வணிகரீதியாக மீன் பிடிப்பது தடை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நன்னீர் மீன் உயிரினங்களில் பல வகை இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உள்ளூர் மீன் இனங்களை பாதுகாக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள், அது தொடர்பான அராய்ச்சி குறித்த விழிப்புணர்வு ஆகியவை நடத்தப்பட வேண்டும் எனவும அவர் கூறினார்.

இதுதொடர்பாக பேசிய கோயம்புத்தூர் மாநகராட்சியை சேர்ந்த அலுவலர், டிசம்பர், 31ம் தேதியுடன் சிங்கநல்லூர் ஏரியில் மீன் பிடிக்க வழங்கப்பட்டு வந்த குத்தகை காலம் முடிகிறது. மீண்டும் அதை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் சிங்கநல்லூர் ஏரியில் மொத்தம் 720 விதமான உயிரினங்கள் வசிக்கின்றன. அதில் 400 வகையான செடி மற்றும் 200 வகையான மருத்துவ குணம் பெற்ற தாவரங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 10 வித பறவை இனங்களும் ஏரிகளை சுற்றி வசித்து வருகின்றன.

அடுத்த செய்தி