ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்: கோர்ட்டில் மீண்டும் 'டைம்' கேட்டுள்ள எலக்ஷன் கமிஷன்!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் பதிலளிக்க, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 23 Jan 2020, 6:27 pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநிலத் தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டுள்ளது.
Samayam Tamil உள்ளாட்சித் தேர்தல்: கோர்ட்டில் மீண்டும் டைம் கேட்டுள்ள எலக்ஷன் கமிஷன்!


தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் மட்டும் இரண்டு கட்டங்களாக, டிசம்பர் 27, 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏணைய மாவட்டங்களில் இத்தேர்தல் நடத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி தெரியுமா?

ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தல் முடிவுகள் ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் வெளியாகின.

இந்த நிலையில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த உத்தரவிடக் கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கில் பதிலளிக்க தங்களது அவகாசம் அளிக்க வேண்டும் என்ற மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை: உதயநிதி ஸ்டாலின்
இதனை ஏற்ற நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தவ் நடத்துவது தொடர்பாக பதிலளிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி