ஆப்நகரம்

காங்கிரஸ் அரசு அமைந்தால் காவிரியில் நீர் கிடைக்காது: முதல்வர் பழனிச்சாமி!

மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால், காவிரியில் நீர் கிடைக்காமல் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 14 Apr 2019, 11:23 am
மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால், காவிரியில் நீர் கிடைக்காமல் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Samayam Tamil காங்கிரஸ் அரசு அமைந்தால் காவிரியில் நீர் கிடைக்காது: முதல்வர் பழனிசாமி!
காங்கிரஸ் அரசு அமைந்தால் காவிரியில் நீர் கிடைக்காது: முதல்வர் பழனிசாமி!


கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். புங்கம்பாடி கார்னர் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் இடையே அவர் பேசும்போது, ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற கூட்டணி கேரளாவில் ஒரு மாதிரியாகவும், தமிழகத்தில் வேறு நிலைப்பாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

காவிரி விவகாரத்தில் 23 நாட்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய போராட்டத்தால் நதிநீர் ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு. காவிரி நீர் கிடைக்காமல் தமிழகத்தின் வளர்ச்சி இல்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என அறிவிப்பு செய்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. மேகதாது அணை கட்டப்பட்டால் 63 டிஎம்சி நீர் தேக்கப்படும். தமிழகத்திற்கு புதிய குடிநீர் கூட கிடைக்காது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். இந்த நிலை தமிழகத்திற்கு வேண்டுமா என்று மக்கள் யோசித்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இருந்து அவர்களின் மனதை மாற்றி தில்லுமுல்லு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாராளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் கொண்டு வந்த போது அதனை முழுமையாக எதிர்த்தது அதிமுக மட்டுமே. ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான மானியத்தில் மத்திய அரசு நிதியை நிறுத்தியது.

ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.

எனவே இரட்டை இலை சின்னத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பேசினார். இக்கூட்டத்தில் வேட்பாளர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் வந்தனர்.

அடுத்த செய்தி