ஆப்நகரம்

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமைதான் சரி: திருநாவுக்கரசர்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் நல்லது காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Jun 2022, 7:16 am
அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அக்கட்சி தற்போது ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என பிரிந்து நிற்கும் சூழல் நிலவுகிறது.
Samayam Tamil thirunavukkarasu


இரு தரப்பும் மாறி மாறி செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளா? அமைச்சர் விளக்கம்!
"மத்தியலேயோ மாநிலத்திலேயோ ஆளும் கட்சி எப்படி முக்கியமோ அதேபோல் பிரதான எதிர்கட்சி வலுவாக இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. அதிமுகவில் யார் இருக்க வேண்டும் என்பதைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் ஒரு கட்சி பலமாக வலுவாக நடப்பதற்கு ஒற்றை தலைமையில் செயல்படுவது தான் சிறப்பு.

இந்தியாவில் தேசிய, மாநில என்று எந்த கட்சியாக இருந்தாலும் ஒருவர் தான் தலைவராக இருப்பார்கள். இரட்டை தலைமை எந்த கட்சியிலும் நடைமுறை கிடையாது. அதிமுக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் ஆட்சியிலிருந்த கட்சி. தற்போது பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஒருவரின் தலைமையில் கட்சி இயங்குவது ஜனநாயக ரீதியாக அந்த கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது” என்று கூறினார்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
திருநாவுக்கரசர் தனது அரசியல் பயணத்தை அதிமுகவில் இருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கட்சி தொடங்கி எம்ஜிஆர் போட்டியிட்ட முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் (1977) திருநாவுக்கரசரும் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை சபாநாயகர் ஆனார். அப்போது அவருக்கு வயது 27. பின்னர் 80 முதல் 87 வரை எம்ஜிஆர் அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.

அடுத்த செய்தி