ஆப்நகரம்

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்., குழு அமைப்பு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது

TNN 11 Mar 2016, 4:03 pm
சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil congress sets up panel for seat talks with dmk
திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்., குழு அமைப்பு


கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த காநிடஸ் மேலிட தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தனர்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஜி.கே. வாசனின் பிரிவுக்கு பின்னர் அவ்வளவு இடங்கள் எதிர்பார்க்க முடியாது என்றாலும் 45 முதல் 50 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தேமுதிக தனித்து போட்டியிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிவிப்பால், உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்திட விரைவில் ஒரு குழுவினை அமைத்திட காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோருக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி