ஆப்நகரம்

நெல்லை நீடிக்கும் மழை: அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

காரையார் வனப்பகுதியில் சாரல் நீடிப்பதால் நெல்லை அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது.

TNN 27 Jan 2017, 9:43 pm
நெல்லை: காரையார் வனப்பகுதியில் சாரல் நீடிப்பதால் நெல்லை அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது.
Samayam Tamil continuous rainfall in water reservoirs in tirunelveli
நெல்லை நீடிக்கும் மழை: அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையார் வனப்பகுதிகளில் புதன்கிழமை முதல் தொடர் மழை பெய்கிறது. இதனால், பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

32.70 அடியாக இருந்த பாபநாசாம் அணையின் நீர்மட்டம் நேற்று 34.55 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 627.07 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வினாடிக்கு 204.75 கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 12 மி.மீ, பாபநாசம் கீழ்அணையில் 6 மி.மீ, சேர்வலாறில் 5 மி.மீ, மணிமுத்தாறில் 3.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. மேலும், காரையார், சேர்வலாறு, பாபநாசம், பாபநாசம் கீழ்அணை மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு தொடர்கிறது.

அடுத்த செய்தி