ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா..! 5 பேர் பலி

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மாற்றம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 26 Jan 2021, 9:40 pm
தமிழகத்தில் இன்றைய (26-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil மாவட்ட வாரியாக நிலவரம்


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,35,803 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 4,736 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 230522 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 224818 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4088 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54125 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 53012 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 670 பேர் பலியாகியுள்ளனர்.

நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை..!

செங்கல்பட்டில் இன்று 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51336 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50192 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 764 பேர் பலியாகியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2239 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.

அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருத்தருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4677 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,617 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,54,41,642 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 595 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,18,742 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை /12,325 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி