ஆப்நகரம்

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1,92,964 , இன்று 88 பேர் பலி..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மாற்றம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரம்

Samayam Tamil 23 Jul 2020, 6:35 pm
தமிழகத்தில் இன்று புதிதாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பானது 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil corona in chennai


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1336 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 13569 ஆக உயர்ந்துள்ளது.

இறப்பு பொறுத்தவரையில் 88 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3232 ஆக அதிகரித்துள்ளது.


இன்று மேலும் 5210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 136793 ஆகும்.

"கந்தனுக்கு அரோகரா"ன்னு சொன்ன ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 52,939 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி