ஆப்நகரம்

கொலை வெறி கொரோனா குரூப்ஸ்-ன் அட்டகாசம்; வைரலாகும் கல்யாண போஸ்டர்!

கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், அதை மையமாகக் கொண்டு கல்யாண போஸ்டர்கள் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

Samayam Tamil 31 Oct 2020, 9:52 am
உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் பெயர் கொரோனா. இந்த வைரஸ் கடந்த ஆறு மாதங்களாக பொதுமக்களை பாடாய் படுத்தி வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் பெயர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விட்டது. இதை வைத்து புதிது, புதிதாக பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றி வருகின்றனர். சில இடங்களில் புதிதாய் பிறந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்துள்ளனர். சில ஓட்டல்களில் கொரோனா மற்றும் முகக்கவச வடிவில் உணவுகள் தயாரித்து பரிமாறுகின்றனர்.
Samayam Tamil Corona Marriage


அந்த வகையில் கல்யாண வீடுகளுக்குள்ளும் கொரோனாவின் அட்ராசிட்டி நுழைந்துள்ளது. கன்னிராஜபுரம் என்ற ஊரில் பாலமுருகன் மற்றும் பூர்ணலிங்க ஈஸ்வரி ஆகியோருக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன. அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா? நீங்களே பாருங்க.

போஸ்டரின் தலைப்பே “முள்ளுவாடியில் பரபரப்பு. ஆசிரியருக்கு தொற்று உறுதி” என அதிர வைக்கிறது. உற்று நோக்கினால் தான் திருமண போஸ்டர் என்று தெரிய வைக்கிறது. மணமகன், மணமகள் ஆகியோரின் பெயரை தொற்றானவர், தொற்றிக் கொண்டவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். திருமண நாளை தொற்று உறுதி செய்த நாள் என்று கிண்டலாக பதிவு செய்துள்ளனர்.

வேல் யாத்திரை நடத்தும் பாஜக இதற்கு ஆதரவு அளிக்குமா?

திருமணம் நடைபெற்ற இடத்தை தொற்று பரவிய இடம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதில், சிகிச்சை என்று கூறி, நண்பா நீ போராட வேண்டியது கொரோனா உடன் அல்ல. மனைவி பூர்ணா உடன் என்று கூறியிருப்பது தான் போஸ்டரின் ஹைலைட். வழக்கமாக திருமணத்திற்கு போஸ்டர்கள் அடிப்பவர்கள் ஏதேனும் ஒரு நடிகரின் ரசிகர்களாக அல்லது அரசியல் கட்சியின் தொண்டர்களாக இருக்கக்கூடும்.

ஆனால் இவர்களோ கொரோனாவிற்கு தீவிர ரசிகர்கள் போல் தெரிகிறது. இந்த குழுவிற்கு கொலை வெறி கொரோனா குரூப்ஸ் என்று பெயர் வைத்து அசத்தியிருக்கின்றனர்.

அடுத்த செய்தி