ஆப்நகரம்

கொரோனா: சென்னையை தொடர்ந்து இந்த மாவட்டங்களிலும் அதிரடி நியமனம்!

கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள 3 மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 20 May 2020, 5:51 pm
சென்னை: கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவில் தலை தூக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதையளிக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ள பரிசோதனையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 688 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 11,760லிருந்து 12,488ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7668 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே 25 முதல் நீங்க மீண்டும் வானத்தில் பறக்கலாம்!!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா பாதிப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர் மாவட்டத்துக்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி