ஆப்நகரம்

தமிழகத்தில் இந்த அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு..! மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2020, 8:07 pm
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பும், இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்து 224 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Samayam Tamil tn corona cases


கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. 98 நாட்களுக்குப் பின் உயிரிழப்பு குறைந்துள்ளது. 70 லட்சத்து 75 ஆயிரம் பேர் பெருந்தொற்றிலிருந்து குணமான நிலையில், 6 லட்சத்து 69 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தின் இன்றைய நிலவரம்:

தமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,09,005 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,95,672 ஆக உயர்ந்துள்ளது.

மன்னுக்குள் புதைந்த சிறுவன் சுஜித் நினைவு தினம்!

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 10,924 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்ட்டுள்ளனர்.இதுவரை 6,67,475 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,606 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி