ஆப்நகரம்

கொரோனா: எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jul 2020, 8:11 pm
கொரோனா பாதிப்பு சென்னையில் முன்பைவிட சற்று குறைந்துள்ள நிலையில் பிற மாவட்டங்களில் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து ஜூலை 31ஆம் தேதி வரை இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil coronavirus cases


தமிழ்நாட்டில் பொது முடக்கம் ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் என கொரோனா குறித்து தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

*
தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

* சென்னையில் இன்று 1,078 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பானது 15,814 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 97,310 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று அதிகபட்சமாக 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகம் முழுக்க தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 47,912 பேர் உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

*ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சந்தை நாளை முதல் மூடப்படுகிறது.

*திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 7,264 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 129ஆக உள்ளது.

*சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 16,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*காஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

*சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் மேலும் ஒரு உதவி ஆய்வாளர் உயிரிழந்ததால் சென்னை காவல்துறையில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது.

*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள், ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தமிழகத்தில் நேற்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,573ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 2032 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி