ஆப்நகரம்

கொரோனா: அசால்டாக பாதிப்பு உயரும் மாவட்டங்கள் இவைதான்!

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Samayam Tamil 20 Jul 2020, 7:27 pm
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் பாதிப்பு முன்பைவிட சற்று குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும் பலி எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருவள்ளூரிலும், தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக விருதுநகரிலும் அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் உள்ளது.
Samayam Tamil coronavirus


தமிழ்நாட்டில் பொது முடக்கம் ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் என கொரோனா குறித்து தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

* தமிழகத்தில் இன்று மேலும் 4,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பாதிப்பு. சென்னையில் 1298 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு 15127 ஆக அதிகரித்துள்ளது.

* இன்று மேலும் 3861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவறை குணமானோர்களின் எண்ணிக்கை 121776 ஆக அதிகரித்துள்ளது. இன்றும் அதிகபட்சமாக 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2551 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 51,348 பேர் உள்ளனர்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*இராஜபாளையம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் கொரோனா காலத்தில் கறி விருந்து வைத்த நகராட்சி ஆணையாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

*பொது முடக்கம் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வராததால் உணவு இல்லாமல் குரங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

*தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் 31ஆம் தேதி வரை விசைத்தறிக் கூடங்களை மூட விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர் .

*திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஸ்ரீனிவாச மூர்த்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

*தமிழகத்தில் நேற்று மட்டும் 4,979 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,859ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 2481 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 4,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,17,915 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி