ஆப்நகரம்

உயரும் கொரோனா பாதிப்பு, குறையும் உயிரிழப்பு... தமிழக கள நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் மாவட்ட வாரியாக

Samayam Tamil 1 Aug 2021, 9:37 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,61,587 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


மாநிலத்தில் தற்போது 20,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 538326 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 528333 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8318
பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,583 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 225444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2178 பேர் பலியாகியுள்ளனர்.


செங்கல்பட்டில் இன்று 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 162096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 158550 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2403 பேர் பலியாகியுள்ளனர்.

திருமாவுக்கு பிளாஸ்டிக் நாற்காலி, சர்ச்சையில் திமுக அமைச்சர்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,927 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,67,30,803 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 2,156 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,06,961 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,102 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி