ஆப்நகரம்

10 மாத குழந்தைக்கு கொரோனா... தமிழகத்தில் பாதிப்பு 50 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 மாத குழந்தையும் அடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Mar 2020, 7:06 pm
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி (மார்ச் 28), சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக இருந்தது.
Samayam Tamil beela


இந்த நிலையில், புதிதாக இன்று எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன இவர்கள் எட்டு பேரும், கொரோனா தொற்றுக்கு ஆளாகி ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கிறது? நடவடிக்கைகள் போதுமா?

இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, " விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, நெல்லை, தேனி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளும் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் மொத்தம் 17,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 4,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 45,538 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்" என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா: வீடு வீடாக வேட்டை நாளை ஆரம்பம் - அரசு அதிரடி!!

புதிதாக இன்று கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள எட்டு பேரில் 10 மாதமே ஆன ஆண் குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி