ஆப்நகரம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உங்க ஏரியாவில் எத்தனை பேர்? - முழுவிவரம் இதோ!!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலவாரியாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Apr 2020, 5:10 pm
தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Samayam Tamil ccc


நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 2), மாநிலம் முழுவதும் மொத்தம் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மட்டும் மொத்தம் 44 பேர் கொரோனா தொற்று ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் விவரத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேர்? - முழுவிவரம் இதோ!!

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக, அண்ணாநகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் 7 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் 6 பேர் கொரோனாவுக்கு ஆளாகியுள்ளனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக, சோழிங்நல்லூர் மண்டலத்துக்குட்பட்ட பனையூரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி