ஆப்நகரம்

சென்னையை கடக்கிறதா கொரோனா புயல்?

தமிழ்நாட்டில் ஆறாம்கட்ட பொது முடக்கம், கொரோனா வைரஸ் பாதிப்பு, பரவல், பலி, தடுப்பு நடவடிக்கைகள், தளர்வுகள் குறித்த முக்கிய தகவல்களை லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்.

Samayam Tamil 6 Jul 2020, 1:46 pm
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நான்காயிரத்தை கடந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பலி எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு தற்போது சென்னயைவிட பிற மாவட்டங்களிலேயே அதிகளவில் பதிவாகிவருகிறது.
Samayam Tamil coronavirus cases in madurai


தமிழ்நாட்டில் பொது முடக்கம் ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் என கொரோனா குறித்து தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

*கொரோனா பரிசோதனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் கோவையில் உள்ள நான்கு பரிசோதனை மையங்களின் அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.

*புதுச்சேரியில் இன்று மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

*திருநெல்வேலியில் மேலும் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

*அரியலூர் மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார்.

*தமிழகத்தில் நேற்று மட்டும் 4150 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,254ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 1510 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 2186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62,778 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி