ஆப்நகரம்

பிரியாணி கேட்டு அடம்பிடித்த கொரோனா பேஷன்ட்: கோவையில்தான் இந்தக் கூத்து!!

வீட்டு சாப்பாடு கேட்டு அடம்பிடித்ததுடன், மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளியின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Apr 2020, 2:17 am
கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
Samayam Tamil corona kovai


இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி, கணவன் மீதுள்ள பாசத்தில் பிரியாணி கொண்டு வநதுள்ளார். ஆனால், கொரோனா சிகிச்சையில் இருப்பதால் பிரியாணி உள்ளிட்ட வீட்டில் தயார் செய்யப்பட்டு கொண்டுவரும் எந்த உணவையும் உட்கொள் அனுமதிக்க முடியாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தீயணைப்பு கருவியை எடுத்து கொரோனா வார்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை ஆர்.எம்.ஓ. போலீசில் புகார் அளித்தார்.

டெல்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைப்பு!!

இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை வீட்டிலோ, மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும்போது, கடுமையான மருத்துவ விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரியாணி கேட்டு அடம்பிடிக்கும் கொரோனா நோயாளியை க்ண்டு, மருத்துவமனை நிர்வாகம் நொந்துபோய் உள்ளது.

அடுத்த செய்தி