ஆப்நகரம்

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவிற்கு கொரோனா!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jul 2020, 1:31 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி 1,07,001 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 60,592 பேர் குணமடைந்து விட்டனர். 1,450 பேர் பலியாகியுள்ளனர். 44,959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கோவிட்-19 பாதித்துக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil AIADMK MLA Amman Arjunan.


அந்த வகையில் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மக்களுக்கு எதிரி ஆனது எப்படி?

இவரது குடும்பத்தினர் கடந்த வாரம் மதுரைக்கு சென்று வந்தனர். இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கடுத்த மூன்று நாட்களில் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவில் தலா 4 எம்.எல்.ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சசிகலா வந்ததும் அதிமுகவுக்கு கூட்டி வருவேன்: இன்னோவா கேட்கும் பி.எஸ்.பாண்டியன்

அடுத்த செய்தி