ஆப்நகரம்

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா உறுதி

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

Samayam Tamil 28 Aug 2020, 9:02 pm
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி, கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
Samayam Tamil ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்


திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு, நிலோபர் கபில் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு, வசந்தகுமாரின் மறைவுக்கு தினகரன் இரங்கல்!

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரேனா உறுதியானதை அடுத்து ஜெகத்ரட்சகன், அவரது மனைவி ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி