ஆப்நகரம்

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம்: தமிழக அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 17 Mar 2020, 8:42 pm
சென்னை: தமிழகத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவில் வுகான் நகரில் தொடங்கி 150க்கு மேலான நாடுகளுக்குப் பரவியுள்ளது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். 1.82 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 14 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதோடு ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களை மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கும்படியும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'மாண்புமிகு முதல்வரே'... இந்தியாவுக்கு வரமுடியாமல் தவிக்கும் மாணவர்கள்..!

இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குளிர்சாதன பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், திரைச்சீலைகள் அகற்றப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், கால்டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி