ஆப்நகரம்

தமிழகத்தின் இன்றைய நாளில் கொரோனா நிலவரம்..! மாவட்ட வாரியாக காண்போம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் நிலவரத்தை மாவட்ட வாரியாக காண்போம்

Samayam Tamil 9 Nov 2020, 6:56 pm
தமிழகத்தில் இன்று (நவம்பர் 9) மாலை நிலவரப்படி, மொத்தம் 7,46,079 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 7,15,892 பேர் குணமடைந்துள்ளனர். 11,362 பேர் பலியாகியிருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை 74,508 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாக 2,257 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா நிலவரம்


அதிகபட்சமாக சென்னையில் 585 பேரும், கோயம்புத்தூரில் 189 பேரும், திருவள்ளூரில் 125 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 18 பேர் பலியாகியிருக்கின்றனர். 18,825 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 1,06,36,999 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

வயது வாரியாக பார்க்கும் போது, 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் தான், தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மட்டும் 626330 என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆண்கள் 378070 பேர் ஆவர். மேலும் பெண்கள் 248227 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர்.


போலீஸ் அலட்சியத்தால் ஒரு உயிர் அநியாயமாக போயுள்ளது - சீமான் வேதனை

தலைநகர் சென்னையில் 205419 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதில் 195880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3726 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 5813 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கோயம்புத்தூரில் 45287 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதில் 43711பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 576 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி