ஆப்நகரம்

ஒரு கொசு என்ன ஆட்டம் போடுது..! லட்ச கணக்கில் அபராதம் வழங்கும் தனியார் நிறுவனங்கள்...

சுகாதார குறைபாட்டினால் கொசு உற்பத்தியாவதற்கு வழி வகுப்பதாக 3 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Oct 2019, 6:57 pm
டெங்கு காய்ச்சலால் தமிழகம் திணறி வருகிறது. பருவ மழை தொடங்கியுள்ளதால் கொசுக்களின் உற்பத்தியும் பெருகியள்ளது. இதனால் வசிப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி மாநகராட்சி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil 6


கடைக்கு வந்த பெண்ணை இழிவாக பேசிய மார்வாடி.! ரவுண்டு கட்டிய இளைஞர்கள்.. வீடியோ.!

டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகும் ''எடியஸ் எஜிப்டி'' வகை கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே விடாமல், வெளிப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள மாநகராட்சி பகுதியில், கலெக்டர் கதிரவன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில், பிளாஸ்டிக்கை ஒழிப்பதும் டெங்கு கொசுக்களை உற்பத்தி ஆகாமல் தடுப்பதுமான முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டது.

வலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..! களமிறங்கிய தல ரசிகர்கள்..

இதனால் மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 3 தொழில் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.

உழைப்புக்கு வயது ஒரு தடையில்லை... 113 வயதில் உழைத்து வாழும் மிட்டாய் தாத்தா

இந்த அதிரடி உத்தரவை அடுத்து அரசின் முதன்மை செயலாளரான பாலசந்திரன் பேசுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாவட்டத்தில் டெங்கு இறப்புகள் ஏதும் நடக்கவில்லை. இந்த விழிப்புணர்வு மூலமாக நடத்தப்படும் ஆய்வில் சுகாதாரமற்ற நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி