ஆப்நகரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் தவறவிட்ட ரூ.34,000; கண்டெடுத்த தம்பதி என்ன செய்தார்கள் தெரியுமா!

திருச்சி: கோவிலில் தவறவிட்ட தொகையை, ஒரு தம்பதி பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

Samayam Tamil 26 Oct 2018, 6:54 pm
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த தம்பதி ரவி மற்றும் தேவி. இவர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவிலுக்கு சென்றனர். அங்கு தனது மகளின் திருமணப் பத்திரிகையை சாமி முன்பு வைத்து வழிபட திட்டமிட்டிருந்தனர்.
Samayam Tamil Srirangam temple tower


கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தனர். கோவில் வாசல் அருகே ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் சிதறிக் கிடந்தன. அதனுடன் ஆதார் கார்டு, ஏடிஎம், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை கிடந்துள்ளன.

அவற்றை எடுத்து பார்த்தால் மொத்தம் ரூ.34,500 இருந்துள்ளது. அங்கிருந்த ஆவணங்கள் மூலம் உரிமையாளரின் முகவரியைக் கண்டறிந்தனர். பணத்தை தவறவிட்டவர்கள் மணப்பாறை அருகே புத்தாநத்தத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அந்த தம்பதி நேரே காவல் நிலையம் சென்றனர். அங்கு யாரும் புகார் அளிக்க வருகிறார்களா என்று காத்திருந்தனர். அப்போது ஒரு முதியவர் தனது பணத்தைக் காணவில்லை எனப் புகார் அளிக்க ஓடி வந்தனர்.

அவரது பெயர் ஆண்டியப்பன். உடனே அவரிடம் பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர். அவர் அந்த தம்பதிக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இதேபோல் அவர்களை அங்கிருந்தவர்களும் பாராட்டினர்.

அடுத்த செய்தி