ஆப்நகரம்

ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: ஜூலை 31க்குள் அமல்படுத்த உத்தரவு..!

ரேஷன் கார்டு மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவதை குறித்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 29 Jun 2021, 2:48 pm
இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ம் கொண்டு வந்தது. புலம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில்கொண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தங்களது சொந்த மாநிலத்தில் கிடைப்பதை போல மற்ற மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
Samayam Tamil கோப்புப்படம்


ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை மாதம் 31க்குள் அமல்படுத்த டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள் தருவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேறு மாநிலத்தவர்கள் தாங்கள் இடம்பெயரும் மாநிலங்களில் உணவு தானியங்களை பெறலாம். ஆனால், அந்தந்த மாநில அரசு மக்களுக்கு வழங்கும் நல திட்டங்களையோ, சிறப்பு சலுகையை பெற முடியாது.

ஐஸ்க்ரீம் விற்பனை செய்த ஊரிலேயே காவல் துணை ஆய்வளராக தேர்வாகியுள்ள இளம் பெண் அனைவருக்கும் உதாரணமாக திகழ்கிறார்

அதே போல, ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதே மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் படி மொத்தம் 23 கோடி அட்டைகளில் 85 சதவீதம் அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி