ஆப்நகரம்

நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு - இதுதான் காரணம்!

நக்கீரன் கோபால் மீதனான வழக்கில் முகாந்திரம் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுவதாக கூறியது. இதுகுறித்து நக்கீரன் கோபால் வழக்கறிஞர் பேட்டி அளித்தார்.

Samayam Tamil 9 Oct 2018, 5:19 pm
சென்னை: நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் அனுப்ப உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil nakkerangopal


ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதியப்பட்ட 124ம் பிரிவுன் கீழ் வழக்கு பதிவு செய்ய இயலாது. இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கறிஞர் பெருமாள் பேச்சு:
மிரட்டும் வகையில் கட்டுரை இல்லை என வாதம் வைத்தோம். மேலும் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் ஆளுநர் தெரிவிக்கவில்லை.

நக்கீரன் ஆளுநருக்கு எதிராக கடந்த ஏப்ரல் செய்தி வெளியிட்டதாகவும், அதனால் ஆளுநரின் பணி பாதித்ததாக, செய்தியை ஆதாரமாக இணைத்து வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விடுதலைக்கு பின் நக்கீரன் கோபால் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி

ஏப்ரல் மாதம் வெளியிட்ட செய்திக்கு இப்போது வழக்கு பதிவு செய்ய முடியாது. இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் அனுப்ப எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் பேசியதாவது:124ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. ஆளுநரை பணிக்கு தடை செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால் பெரும் ஆபத்து. இந்த வழக்கை ஆதரித்தால் நாடு முழுவதும் இது போன்ற முறையற்ற வழக்கு பதிவு அதிகமாகும் என இந்து என். ராம் கூறினார்.

அடுத்த செய்தி