ஆப்நகரம்

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீண்ட கோவை மாணவர்கள்; பிளஸ் 2 தேர்வில் சாதனை!

குழந்தை தொழிலாளர்களாக இருந்த மீட்கப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளனர்.

Samayam Tamil 16 May 2018, 4:48 pm
கோவை: குழந்தை தொழிலாளர்களாக இருந்த மீட்கப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளனர்.
Samayam Tamil Plus Two Results


குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்று அரசும், பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. இருப்பினும் குடும்ப சூழல், வறுமை போன்ற காரணங்களால் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 8 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் தரணிதரன் என்ற மாணவர் 1093 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். இதேபோல் மற்ற மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வி கற்க இருக்கின்றனர்.

Covai Child Labour Students achieved in Plus 2 Exams.

அடுத்த செய்தி