ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: கோவையில் இடமாறிய குடியரசு தின விழா நிகழ்வுகள்

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதன் எதிரொலியாக, குடியரசு தின விழா நிகழ்வுகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

TNN 26 Jan 2017, 1:39 pm
கோவை: ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதன் எதிரொலியாக, குடியரசு தின விழா நிகழ்வுகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
Samayam Tamil covai republic day parade shifted from voc park
ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: கோவையில் இடமாறிய குடியரசு தின விழா நிகழ்வுகள்


ஜல்லிக்கட்டு அனுமதி வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் வ.உ.சி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் என்று கூறி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி, பொதுமக்களை கலைத்தனர். இதனால் குடியரசு தின விழாவை கருப்பு தினமாக அனுசரிப்போம் என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோவையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கமாக வ.உ.சி மைதானத்தில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் குடியரசு தின விழாவை கண்டித்து, போராட்டம் நடைபெறும் எனக் கருதி, விழாவிற்கான இடம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்படை மைதானத்தில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடத்தப்பட்டன. குடியரசு தின விழாவை ஒட்டி, கோவை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

Covai Republic Day parade shifted from VOC Park.

அடுத்த செய்தி