ஆப்நகரம்

திமுகவுக்கு விசிக, இடதுசாரிகள் புதிய நெருக்கடி: என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும், விசிகவும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளன.

Samayam Tamil 18 May 2022, 7:21 am
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களான கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், என்.கே.நடராஜன் ஆகியோர் நேற்று மே 17ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
Samayam Tamil dmk alliance


பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தேசிய அளவில் நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாட்டில் இணைந்து செயல்படுவோம் என்று கூட்டாக அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், மே 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த பிரச்சார இயக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 26, 27 தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், 25 முதல் 31 ஆம் தேதி வரை வீடுவீடாக ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை வீழ்த்தும் முக்கிய விக்கெட்டுகள்: பதறும் கட்சிகள்!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி தலைமையின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்காமல் பல்வேறு விஷயங்களில் தனித்து களமாடி வருகின்றனர்.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளித்தார். அந்நிகழ்வை தமிழக அரசு புறக்கணித்தது. உண்மையில் விசிக, இடதுசாரிகள் எடுத்த நிலைப்பாடு காரணமாகவே திமுகவும் தமிழக அரசும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை எடுக்க நிர்பந்திக்கப்பட்டனர் என்றே கூறுகிறார்கள். ஏனெனில் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தது விசிகவும், இடதுசாரிகளும் தான்.

கலைஞர் செய்த தவறு.. பாடம் கற்காத ஸ்டாலின்? போட்டு தாக்கும் ரவீந்திரன் துரைசாமி

தற்போது ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்திலும் அக்கட்சிகள் திமுகவை எதிர்பார்க்கவில்லை. எனவே ஒன்றிய அரசு எதிர்ப்பு போராட்டத்தில் திமுக இடது சாரிகளையும், விசிகவையும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் இடதுசாரிகள், விசிக அணியில் மதிமுக ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியும் வலம் வருகிறது.

அடுத்த செய்தி