ஆப்நகரம்

'எல்லா பொண்ணுங்களையும் சாப்ட்ருவான்'.. நெறியாளருக்கு நேரம் குறிச்ச மதன்...

பெண்களை பற்றி இழிவாக பேசியதாக நெறியாளர் ஐயப்பன் ராமசாமி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

Samayam Tamil 16 Mar 2023, 4:23 pm
ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் பிரபல நெறியாளர்களை பொறி வைத்து சிக்க வைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசியது, ஸ்டார் ஹோட்டலில் மது விருந்து, கமிஷன் வாங்குவது என பிரபல யூடியூபர்ஸ்களான மாதேஷ், முக்தார், ஐயப்பன் ராமசாமி, ரவீந்திரன் துரைசாமி உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் வீடியோக்களை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அந்த குற்றசாட்டுகளை குறித்து சம்மந்தப்பட்டவர்கள் யாரும் வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர்.
Samayam Tamil ayyappan ramasamy


மேலும், வீடியோவில் சம்மந்தபட்ட அனைவரும் யூடியூபில் ட்ரெண்டில் உள்ள நெறியாளர்கள் என்பதால் அவர்களது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக நீதி, பெண் உரிமை என பெரியாரிஸ்ட்டாக தன்னை முன்னிறுத்தி வலதுசாரிகளை நேர்காணல் எடுத்து பிரபலமான ஐயப்பன் ராமசாமி இந்த டிராப்பில் சிக்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் ஐயப்பன் ராமசாமி, '' எனக்கு ட்விட்டர் விட இன்ஸ்ட்டாகிராமில் தான் டீனேஜ் பெண்கள் பாலோவர்ஸ் அதிகமாக உள்ளனர். அதனால்தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை அட்மினிடம் கொடுக்காமல் நானே பார்த்து வருகிறேன். அட்மினிடம் கொடுத்துவிட்டால் அவனே மொத்தத்தையும் சாப்ட்ருவான்.. பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு (பத்திரிகையாளர்) இருக்கும் பாலோவர்ஸுக்கும் என்னை பிடிக்கும். ஒருநாள் அவங்களோட இன்ஸ்ட்டா போஸ்டில் ''ஐயப்பன் ராமசாமியின் பேன்ஸ்'' என சில பெண்கள் கமெண்ட் போட்டிருந்தனர். அதை உடனே அவர் பனிமலர் டெலிட் செய்துவிட்டார்'' என இவ்வாறு ஐயப்பன் ராமசாமி பேசியதாக பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் இந்த வீடியோ வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்றும் விரைவில் உண்மை தெரிய வரும் என்றும் ஐயப்பன் ராமசாமி ட்வீட் போட்டுள்ளார். ஆனால், அதற்கு மதன் ரவிச்சந்திரனின் மார்ஸ் தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில், '' அய்யப்பன் ராமசாமி sorry AR பணம் பெற்றது, பெண் ஊடகவியலாளரைப் பற்றி பேசியது கட்டிங் ஓட்டிங் இல்லாத முழு வீடியோ இன்னும் சில நிமிடங்களில் ...உங்கள் Mars Tamilnadu Youtube பக்கத்தில் .... Stay Tuned...'' என்று கிண்டலாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு வீடியோவால் கே.டி. ராகவன் இருக்கும் இடமே தெரியாமல் போனதைப்போல இன்னும் சில நெறியாளர்கள் போய் விடுவார்களா அல்லது மதன் ரவிச்சந்திரனின் வீடியோக்கள் என்பதை நிரூபித்து அவரவர் இடங்களை தக்க வைத்து கொள்வார்களா என்பதே நெட்டிசன்கள் கேள்வியாக இருக்கிறது.

அடுத்த செய்தி