ஆப்நகரம்

மகனை கருணைக் கொலை செய்ய கேட்ட தந்தை: சோகத்தில் ஆழ்ந்த நீதிமன்றம்

கடலூாில் மூளை பாதிப்புக்குள்ளான சிறுவன் கருணை கொலை செய்யவேண்டிய நிலையில் இல்லை என்று மருத்துவா்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா்.

Samayam Tamil 5 Oct 2018, 5:21 pm
மூளை பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவனை கருணைக் கொலை செய்ய முடியாது, அவரை நிரந்தரமாக குணப்படுத்தவும் முடியாது என்று மருத்துவா்கள் அளித்த அறிக்கையை படித்த நீதிபதி கருணாகரன் உட்பட சென்னை உயா்நீதிமன்றமே சோகத்தில் ஆழ்ந்தது.
Samayam Tamil Chennai Highcourt


நரம்பியல் கோளாறு, மூளை பாதிப்புக்குள்ளான தனது 10 வயது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடலூரைச் சோ்ந்த திருமேனி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை நீதிபதிகள் கருணாகரன், எஸ்.பாஸ்கரன் அமா்வு விசாரித்து வந்தது. முந்தைய விசாரணையின் போது சிறுவனின் உடல் நிலை குறித்தும், கருணைக் கொலைக்கு உத்தரவிட முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மருத்துவா்கள் குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மருத்துவா்கள் தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதி கிருபாகரண் வாசித்தாா். அப்போது, தன்னை சுற்றி நடைபெறும் சம்பவங்களை சிறுவனால் உணர முடிவதால் அவரை கருணைக் கொலை செய்ய இயலாது. அதே வேளையில் மூளை பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவனை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்ற மருத்துவ அறிக்கையை வாசித்த நீதிபதி கிருபாகரண் உணா்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினாா். மேலும் அறிக்கையை கேட்ட ஒட்டுமொத்த நீதிமன்றமும் சோகத்தில் மூழ்கியது.

இதனைத் தொடா்ந்து இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஏன் திட்டம் வகுக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

அடுத்த செய்தி