ஆப்நகரம்

​Gaja Cyclone: தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும்!!!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 2:04 am
கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும்!!!
தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும்!!!


வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கும் என அறிவிக்கப்பட்டது. முதலில் கஜா புயல் சென்னையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது திசை மாறி பாம்பன்-கூடலூர் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் வீசும் இந்த புயல், கரையைக் கடக்கும் போது, சுமார் 100 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவை புயல் தாக்கக்கூடியப் பகுதிகளில் பணியமர்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் கடலோரப் பகுதிகளிலும், இன்று மாலை முதல் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்களுகுக் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி