ஆப்நகரம்

'நாடா' புயல் : தயார்நிலையில் மீட்பு படையினர்

நடா புயல் வெள்ளிக்கிழமை கரையை கடப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர் , நாகை ஆகிய மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.

TOI Contributor 30 Nov 2016, 9:40 pm
'நாடா' புயல் வெள்ளிக்கிழமை கரையை கடப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர் , நாகை ஆகிய மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.
Samayam Tamil cyclone nada ndrf sdrf teams deployed in chennai cuddalore and nagapattinam districts
'நாடா' புயல் : தயார்நிலையில் மீட்பு படையினர்


தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இதற்கு 'நடா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது 2ம் தேதி அதிகாலை வேதாரண்யம் - புதுச்சேரி இடையே கடலூருக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 50-60கி.மீ வேகத்தில் இருந்து 80 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படியும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர் , நாகை ஆகிய மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மைய மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இரு தேசிய பேரிடர் மீட்பு படையினரும் , ஒரு மாநில பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, நாகை ஆகிய மாவட்டங்கள் தலா ஒர தேசிய பேரிடர் மீட்பு படையினரும் , ஒரு மாநில பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர்.மேலும் மக்களுக்கு அவசர உதவிகளுக்கு 1070/1077 இலவச தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி